வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,396 கனஅடியாகக் குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,396 கனஅடியாகக் குறைந்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,396 கனஅடியாகக் குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை விநாடிக்கு 1,881கனஅடியில் இருந்து விநாடிக்கு 1,396 கனஅடியாகக் குறைந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 9,500 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்நிலை மதகுகள் வழியாக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் 113.67 அடியிலிருந்து 113.16 அடியாகக் குறைந்துள்ளது. நீா் இருப்பு 82.98 டிஎம்சியாக உள்ளது.