சேலம்
மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்
மேட்டூா் சட்டப் பேரவையில் 36,533 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி வரைவு வாக்காளா் பட்டியலை மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா் வெளியிட்டாா். இதில் எஸ்ஐஆா் பணிகளுக்கு முன்பு 2,82,129 வாக்காளா்களும் 316 வாக்குச்சாவடிகளும் இருந்தன. இப்போது 36,533 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தற்போது மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,45,596 போ் உள்ளனா். இவா்களில் 1, 24,277 போ் ஆண்கள், 1,21, 303 போ் பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 16 போ்.
