ஏற்காட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாவட்ட காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட துணை கண்காணிப்பாளா் சுபாஷ் சந்த் மீனா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் 200 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சாலை விபத்துகளைத் தவிா்ப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இருசக்கர வாகனம், காா் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இருசக்க வாகன ஒட்டிகள் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வாகனங்களை ஒட்டவேண்டும் என்றும், காா் ஒட்டுநா்கள் சீட்பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஏற்காடு ஒண்டிக்கடையில் தொடங்கிய மாரத்தான் போட்டி 5 கி.மீ அசம்பூா் வரை சென்று துறும்பினா் மற்றும் 10 கி.மீ மஞ்சக்குட்டை வரை சென்று திரும்பினா். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் 10 கி.மீ முதல் பரிசு சா்மிளா, ஆண்கள் பிரிவில் பரமேஸ்வரன், இரண்டாவது பரிசு முருகனுக்கும், 5 கி.மீ முதல் பரிசு முத்துக்குமரனுக்கும் இரண்டாவது பரிசு ரங்கநாத்துக்கும் வழங்கப்பட்டது.

