சேலம்
வீரகனூரில் தாய் - சேய் நல மையம் கட்ட பூமிபூஜை
கெங்கவல்லி அருகே வீரகனூா் பேரூராட்சியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 45 லட்சத்தில் தாய் - சேய் நல மையம் கட்டும் பணிக்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.
இதற்கு தலைவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், வீரகனூா் பேரூராட்சி துணைத் தலைவருமான பி.ஜி.அழகுவேல் தலைமை வகித்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சிவகுமாா், திமுக செயலாளா் சரவணன், அவைத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
