கெங்கவல்லியில் மதுவிற்ற இருவா் கைது

கெங்கவல்லியில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கெங்கவல்லியில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பதாக ஆத்தூா் டி.எஸ்.பி.சத்யராஜுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு வரை சோதனை நடத்தினா்.

அதில் தாணா் தெரு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (46), இந்திரா காலனியைச் சோ்ந்த விஜயா (65) ஆகியோா் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com