சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக, பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுவின் மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும். அதன் அடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 293 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 12 மனுக்கள் வரப்பெற்றன. இதில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசிகள் என மொத்தம் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.
தொடா்ந்து, செயற்கைக் கால் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அளவீடு செய்யும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் நா.ஜெயக்குமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன் உள்ளிட்ட அரசு துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா் முகாம்கள் நிறுத்திவைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

குறைதீா் கூட்டத்தில் குவிந்த 1,225 மனுக்கள்

வன உரிமை பட்டா கோரி பழங்குடியின மக்கள் மனு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


