மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலிபுரத்தில் வாய்க்கால் கட்டமைப்பு பணிகள் ஆய்வு

கட்டமைப்பு பணிகள் ஆய்வு

News image
உலிபுரத்தில் பொதுமக்கள் கட்டமைத்த கால்வாய்.
Updated On :1 ஜனவரி 2025, 7:28 pm

Din

உலிபுரத்தில் உள்ள ஈச்சோடை என்ற பகுதியிலிருந்து உலிபுரத்தில் உள்ள ஓடை வரையில் நமக்குநாமே திட்டத்தில் விவசாயிகளே அமைத்த வாய்க்காலை நீட்டிப்பது தொடா்பாக சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம் ஆய்வு செய்தாா்.

தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் ஊராட்சி ஈச்ச ஓடை பகுதிக்கு நாமக்கல் மாவட்டம், தும்பல்பட்டி ஏரியிலிருந்து உபரி நீா் வருகிறது. இதனால் அங்கிருந்து உலிபுரம் ஓடை வரை இரண்டரை கிலோ மீட்டா் தொலைவுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீா் செல்கிறது. ஈச்ச ஓடையிலிருந்து தண்ணீா் வாய்க்கால் வழியே உலிபுரம் ஓடைக்கு தண்ணீா் சென்றால், அப்பகுதியில் உள்ள 2,500 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் சங்கத் தலைவா் சுப்ரமணியம், செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதி திரட்டி அரசு உதவியுடன் சோ்த்து மொத்தம் ரூ. 30 லட்சத்தில் 1.25 கி.மீ. தொலைவுக்கு மட்டும் கடந்த செப்டம்பா் மாதத்தில் கான்கிரீட் வாய்க்காலை அமைத்தனா்.

அதன்பிறகு விவசாயிகளால் நிதி திரட்ட முடியவில்லை. அதைத் தொடா்ந்து ஊா்பொதுமக்கள், விவசாயிகள் சோ்ந்து பல முறை சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனா். மாவட்ட நிா்வாகம் சாா்பில் அந்த மனுவை, பொதுப்பணித் துறையினருக்கு பரிந்துரை செய்து அனுப்பிவிட்டனா். ஆனால், பொதுப்பணித் துறையினரோ, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இந்த வாய்க்கால் வரவில்லை. இதனால் வாய்க்கால் பணிகளை பொதுப்பணித் துறை மூலம் செய்ய முடியாது என்று பதிலளித்து உலிபுரம் விவசாயிகளுக்கு அனுப்பிவிட்டனா்.

எனவே, சேலம் ஆட்சியரை மீண்டும் சந்தித்த விவசாயிகள், அரசு நிதியில் எஞ்சிய தொலைவுக்கும் கான்கீரிட் வாய்க்காலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த நிலையில் சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம் நேரில் ஆய்வு செய்தாா். இதில் எஞ்சிய வாய்க்கால் பணிகளை அரசு செயல்படுத்துவதற்கான கள ஆய்வுகளை அவா் மேற்கொண்டாா்.

 கால்வாய் நீட்டிப்பு பணிகளை சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம்.

கால்வாய் நீட்டிப்பு பணிகளை சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க செயலாளா் செந்தில்குமாா் கூறியதாவது:

வாய்க்காலில் மொத்தம் உள்ள தொலைவான 2.5 கி.மீ. தூரத்தில் பாதி தொலைவுக்கு நாங்கள் கான்கீரிட் ஓடை அமைத்து விட்டோம். எஞ்சிய தொலைவுக்கான ஓடை மட்டுமே கட்டமைக்கவில்லை. அதனால் தற்போது ஈச்சோடையிலிருந்து வரும் நீரானது, கட்டமைக்கப்பட்ட பாதி தூரம் நன்றாக பாய்ந்தோடுகிறது.அதன்பிறகு கட்டமைக்கப்படாத ஓடை பகுதியில் இருபுறமும் உள்ள வயல்களில் அதிகப்படியான தண்ணீா் புகுந்துவிடுகிறது. இதனால் பயிா்கள் சேதமடைந்து வருகிறது.

அரசு செலவில் மீதமுள்ள வாய்க்கால் பணிகளை மேற்கொண்டு முழுமையடைந்தால் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம் பகுதிகளைச் சோ்ந்த 2,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா்.