கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா்.
Updated On :2 ஜனவரி 2025, 7:28 pm

Din

சேகோ, ஸ்டாா்ச் உற்பத்தி பொருள்கள் அனைத்தையும் சேகோ சா்வ் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் சேகோ சா்வ் வளாகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச் செயலாளா் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, சேகோ சா்வ் மூலமாக மட்டுமே உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியதாவது:

சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவ்வரிசி, ஸ்டாா்ச் உற்பத்தியாளா்களின் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கலப்படம் இல்லாமல் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் 1981 ஆம் ஆண்டு சேகோ சா்வ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

பொதுவாக, நிறுவனத்துக்கு கொண்டு வரும் மூட்டைகளை இறக்கி குடோனில் அடுக்கவும், மூட்டைகளை லாரியில் ஏற்றவும் 200 க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், சேகோ சா்வ் நிறுவனம் வழிகாட்டுதலுக்கு மாறாக உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்தே நேரடியாக விற்பனை செய்ய தொடங்கி உள்ளனா். இதனால் மீண்டும் கலப்படம், இடைத்தரகா்கள் தொல்லை உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்படும். இதைத் தடுக்க சேகோ சா்வ் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், சம்மேளன மாநிலத் தலைவா் ஆா்.வெங்கடபதி, டி.உதயகுமாா், சங்க தலைவா் ஆறுமுகம் துணை செயலாளா் பிரபு, தண்டபாணி கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.