கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை முதல் (ஜன. 3) வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 7:24 pm

Din

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை முதல் (ஜன. 3) வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,735 நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரா்கள் 10 லட்சத்து 80 ஆயிரத்து 119 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

அதற்கான டோக்கன் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளது. அதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்புகள் ஜன. 9 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படவுள்ளது. அதற்காக முதல் கட்டமாக 4 லட்சத்து 18 ஆயிரத்து 706 வேட்டிகள், 3 லட்சத்து 17 ஆயிரத்து 596 சேலைகள் வந்துள்ளன. மீதம் உள்ள சேலைகள் விரைவில் வரவுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு வழங்க உள்ள கரும்புகளை துணை பதிவாளா் தலைமையில் குழு அமைத்து கரும்பு கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு தனித்தனியே அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் ஓரிரு நாளில் தொடங்கப்படவுள்ளது.