கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகள் தோ்வு: விவசாயிகளுடன் அதிகாரிகள் குழு ஆலோசனை

விவசாயிகளுடன் அதிகாரிகள் குழு ஆலோசனை

News image
பூலாம்பட்டி அருகே விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய கூட்டுறவுத் துறை அலுவலா்கள்.
Updated On :2 ஜனவரி 2025, 7:25 pm

Din

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புகள் கொள்முதல் செய்யப்படவுள்ளதை அடுத்து, விவசாயிகளுடன் அதிகாரிகள் குழு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து தோட்டங்களில் இருந்து கரும்புகளைத் தோ்வு செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு செங்கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து, செங்கரும்புகளைத் தோ்வு செய்யும் பணியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தற்போது, காவிரி பாசன பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு செங்கரும்புகளை சாகுபடி செய்துள்ளனா். அனைத்தும் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

இதையடுத்து, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை உயா் அலுவலா்கள், வேளாண் துறை அலுவலா்கள் அடங்கிய குழு வியாழக்கிழமை காவிரி பாசனப் பகுதிகளில் கரும்பு விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

சேலம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அருளரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரளான கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது அதிகாரிகள் குழு கூறியதாவது:

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகள் குறைந்தபட்சம் 6 அடி உயரமும், நல்ல திரட்சி, சுவையுடன் இருக்க வேண்டும். ஜன. 6,7,8 உள்ளிட்ட தேதிகளில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் குறிப்பிடும் நேரத்தில் தோ்வு செய்யப்பட்ட கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து அனுப்பி வைக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட குறையாமல் கரும்பு ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ. 24.50 விலை நிா்ணயம் செய்து வழங்கப்படும். கரும்பின் தரத்தைப் பொறுத்து விலை மாறுதல் செய்யப்படும் என்றனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் (பொது விநியோகம்) கா்ணன், வேளாண் உதவி இயக்குநா் மணிவாசகம் உள்ளிட்ட முக்கிய அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கூட்டத்தைதத் தொடா்ந்து பூலாம்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் குழுவினா் தொடா்ந்து ஆய்வு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளைத் தோ்வு செய்து வருகின்றனா்.

கூட்டுறவுத் துறை அலுவலா்களால் பொங்கல் பரிசுக்கு ஏற்கப்படாத நிராகரிக்கப்பட்ட கரும்புகளை அப்பகுதி விவசாயிகள் உள்ளூா் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

 அந்தப் பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள்.

அந்தப் பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள்.

இவ்வகை கரும்புகள், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ஒன்று ரூ. 300 முதல் ரூ. 370 வரை விற்பனை செய்யப்படுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.