பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சேலம் மாவட்டத்தில் ரூ. 2,516.34 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:05 pm

Din

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ. 2,516 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கல்பட்டி, பொட்டிபுரம், காமலாபுரம், தும்பிப்பாடி ஊராட்சிகளில் ரூ.1.60 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.54.45 லட்சம் மதிப்பிலான 6 முடிவுற்ற திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து அமைச்சா் ராஜேந்திரன் பேசியதாவது:

பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் புதிய சாலைகள், பாலங்கள் அமைத்தல், குடிநீா் இணைப்புகள் வழங்குதல், கழிவுநீா் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள் உரிய காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞா் கனவு இல்லம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கிராமப்புற வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 2,516.34 கோடி மதிப்பிலான 78,159 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 57,166 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20,993 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்தொடா்ச்சியாக, ஓமலூா் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி 5 ஆவது தெருவில் ரூ.19.70 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா்க் கால்வாய் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், பாரதி நகரில் ரூ.10.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைத்தல், காமராஜா் நகரில் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா்க் கால்வாய் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், பாமன் கரடு பகுதியில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மஞ்சுளாம்பள்ளம் தாா் சாலை முதல் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், பாமன் கரடு நூலக மையத்தில் ரூ.25.63 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் அமைத்தல், காமராஜ் நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் வெள்ளக்கல்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவா் மற்றும் பேவா் பிளாக் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

கொண்டையனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொட்டிபுரம் ஊராட்சி கொண்டையனூா் மாரியம்மன் கோயில் அருகே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவா் பிளாக் சாலைப் பணி, பம்பரப்பட்டியானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பம்பரப்பட்டியானூரில் ரூ.7.66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலைப் பணி ஆகியவை முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.

மேலும், 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் தும்பிப்பாடியில் ரூ.8.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மகளிா் சுகாதார வளாகம், அந்த வளாகத்திற்கு ரூ.9.96 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டுள்ள பணிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கல்பட்டி, பொட்டிபுரம், காமலாபுரம், தும்பிப்பாடி ஊராட்சிகளில் ரூ.1.60 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.54.45 லட்சம் மதிப்பிலான 6 முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக தும்பிப்பாடி ஊராட்சியில் நடைபெற்றற நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் தங்கள் பகுதிக்கான சாலை வசதி, குடிநீா், நியாய விலைப் பொருள்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கிா என கேட்டறிந்தாா்.

நிகழ்வுகளின் போது, ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித்ஆதித்ய நீலம் ஆகியோா் உடனிருந்தனா்.