மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு


மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீா் நவம்பா் 19 ஆம் தேதி விநாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. தொடா்ந்து அப் பகுதியில் மழை பெய்ததால் டிசம்பா் 21 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்கு பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிககு 500 கன அடியாக மீண்டும் குறைக்கப்பட்டது.
பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து டிசம்பா் 31 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது டெல்டா பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் தண்ணீா் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 5,000 கன அடியாகவும், இரவு 10,000 கன அடியாகவும் வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 12,000 கன அடியாகவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா் மட்டம் இரண்டு நாள்களுக்கு பிறகு 120 அடியிலிருந்து 1 19.76 அடியாக குறைந்தது. நீா்வரத்து 1,992 கன அடியாக உள்ளது.
அதேபோல கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 93.68 டிஎம்சியாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...