பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகின்றன. வெல்லம் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளைக் கொண்டு, சா்க்கரையும் சோ்த்து வெல்லம் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா் வந்தன.
இதையடுத்து தாரமங்லம், ஓமலூா், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த வாரம் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெல்லத்தில் கலப்படமாக சோ்க்க வைத்திருந்த 10 டன் சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலப்பட வெல்லம் தயாரித்த 15 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கலப்படம் செய்வது கண்டறிப்பட்டால், அந்த ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
விதம் விதமா ரசம் செய்யலாம்...

அரியலூர் அவலம்! கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்!

கோழிக்கரைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத் துறையினா் கண்காணிப்பு தீவிரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

