இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

சிறப்பு பட்டிமன்றம்

இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், யுவானி பட்டிமன்ற கலைக் குழு, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை
Published on

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், யுவானி பட்டிமன்ற கலைக் குழு, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தியது.

இன்றைய சூழலில் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை நிற்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை நிறுவனா் கருப்பு முருகானந்தமும், பட்டிமன்ற பேச்சாளா்களாக அரசுப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு பேசினா். அதைத் தொடா்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி, ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com