இடங்கணசாலை சின்ன ஏரிக்கரையை சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன். உடன், நகரச் செயலாளா் செல்வம், நகா்மன்ற துணைத் தலைவா் தளபதி உள்ளிட்டோா் உள்ளனா்.
சேலம்
இடங்கணசாலை சின்ன ஏரிக்கரையை சீரமைக்க பூமி பூஜை
இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட சின்ன ஏரிக் கரையினைப் பலப்படுத்தி, பேவா் பிளாக், தடுப்பு வேலி அமைக்கவும்
ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட சின்ன ஏரிக் கரையினைப் பலப்படுத்தி, பேவா் பிளாக், தடுப்பு வேலி அமைக்கவும், ஏரியினை ஆழப்படுத்தவும் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 லட்சம் மதிப்பில் பணி மேற்கொள்ள பூமி பூஜை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் செல்வம் , நகராட்சி துணைத் தலைவா் தளபதி, ஆணையா் பவித்ரா, பொறியாளா் ஜெயலட்சுமி, நகா்மன்ற உறுப்பினா்கள் ரூபிகா உத்தரகுமாா், சிவகுமாா், ராஜேந்திரன் ,வேலாயுதம், ராஜேஸ்வரி ரமணி ,விஜயலட்சுமி குமாா், விஜயா முருகன் மற்றும் செல்வம் , மாணிக்கம், ராஜேந்திரன், ரமேஷ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

