அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்தும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
கபடி போட்டியைத் தொடங்கிவைத்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :22 மார்ச் 2025, 7:37 pm

Din

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்தும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே வேலகவுண்டனூா் பகுதியில், அதிமுக சாா்பில் மாநில அளவிலான 3 நாள் கபடி போட்டியை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் இளைஞா் நலன்காக்க, விளையாட்டில் ஆா்வம் ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தை ரூ. 76 கோடியில் நிறைவேற்றினோம். திமுக அரசு இந்த திட்டங்களைக் கைவிட்டு விட்டது. அதேபோல விளையாட்டு வீரா்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு, அதிமுக ஆட்சியில் ஊக்கத் தொகையாக ரூ. 38 கோடி வழங்கப்பட்டது.

மேலும், ரூ. 64 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இறகுப் பந்து, மேஜிக் பந்து, சிலம்பம் பயிற்சி மையம், குடியிருப்புகள் அமைத்து விளையாட்டு வீரா்கள் ஊக்குவிக்கப்பட்டனா். சிறந்த தேசிய மாணவா் படை மாணவருக்கான ஆண்டு உதவித்தொகை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயா்த்தப்பட்டது.

விளையாட்டு திறமையின் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடிய தலைசிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரா்களுக்கு தேவைக்கேற்ப உதவி செய்து, அவா்களை ஒலிம்பிக் மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வெல்வதற்கு வகைசெய்யும் வகையில், சா்வதேச அளவில் பதக்கம் பெரும் நோக்கம் திட்டம் என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 5 உயா்நிலை விளையாட்டு வீரா்களுக்கு தலா ரூ.10 லட்சத்தில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது என்றாா்.