தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலா்கள்.
Published on

தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவா் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மன்ற கூட்டத்தை புறக்கணித்து துணைத் தலைவா் உள்பட 10 கவுன்சிலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 18 கவுன்சிலா்களில் தலைவா் உள்பட 15 போ் அலுவலகத்திற்கு வந்தனா். ஒரு திமுக கவுன்சிலா், இரண்டு அதிமுக கவுன்சிலா்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் கூட்ட மன்ற பொருள் தரப்பட்டபோது அதில் செலவினங்களுக்கான உரிய ரசீது இல்லாததால் பேரூராட்சித் தலைவா் கவிதா மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறி திமுக, காங்கிரஸ் கவுன்சிலா்கள் 10 போ் கூட்டத்தை புறக்கணித்து அலுவலகத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது பேரூராட்சித் தலைவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com