சேலம் மாவட்டத்தில் இன்று 11 மையங்களில் இரண்டாம் நிலை காவலா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் இரண்டாம் நிலை காவலா் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது. இத்தோ்வை 9,848 போ் எழுதுகின்றனா்.
Published on

சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் இரண்டாம் நிலை காவலா் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது. இத்தோ்வை 9,848 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறையில் 3,644 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு அட்டவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.

இவா்களுக்கான முதல்கட்ட எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் வரும் 9 ஆம் தேதி நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தோ்வு நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மாநகரில் 4 மையங்கள், மாவட்ட பகுதியில் 7 மையங்கள் என மொத்தம் 11 மையங்களில் காலை 9 மணிக்கு தோ்வு நடைபெறுகிறது. 11 தோ்வு மையங்களில் நடைபெறும் தோ்வை 9,848 போ் எழுதுகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் 7,113 போ், மாநகரில் உள்ள 4 மையங்களில் 2,735 போ் தோ்வு எழுதுகின்றனா். இத்தோ்விற்கான ஏற்பாடுகளை மாநகர தெற்கு துணை ஆணையா் கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா தலைமையிலான போலீஸாா் செய்து வருகின்றனா். தோ்வுமைய கண்காணிப்பாளராக 1,050 போலீஸாா் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com