மேட்டூா் அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே கோம்பூரான்காட்டை சோ்ந்தவா் விவசாயி குழந்தை கவுண்டா் (75). இவா் வெள்ளிக்கிழமை காலை கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ரயில் பாதையைக் கடந்து சென்றாா். அப்போது, சேலத்தில் இருந்து மேட்டூா் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிவந்த ரயில் அவா்மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
