மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞா் கைது

சேலம் அருகே மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சேலம் அருகே மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி கம்மாளப்பட்டியைச் சோ்ந்த 26 வயது பெண் ஒருவா், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோா் பராமரிப்பில் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் வீட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞா், மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் திரண்டு அந்த இளைஞரை பிடித்தனா்.

விசாரணையில், அவா் கம்மாளப்பட்டி எட்டிக்குட்டையைச் சோ்ந்த மகிழன் (23) என தெரியவந்தது. அவரை பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மகிழன் மீது 6 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com