சேலம் மாநகர காவல் துறைக்கு ஒதுக்கப்பட்ட 10 பிங்க் ரோந்து வாகனங்கள் தொடக்கவிழாவில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி.
சேலம்
சேலத்துக்கு 10 பிங்க் ரோந்து வாகனங்கள்: மாநகர காவல் ஆணையா் தொடங்கிவைத்தாா்
சேலம் மாநகர காவலுக்கு 10 பிங்க் ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம்: சேலம் மாநகர காவலுக்கு 10 பிங்க் ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், காவல் துறை பயன்பாட்டுக்காக ரூ. 12 கோடியில் 80 பிங்க் ரோந்து வாகனங்களின் சேவைகளை கடந்த 11-ஆம் தேதி சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதில், 10 வாகனங்கள் சேலம் மாநகர காவல் ரோந்துப் பணிக்காக ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, சேலம் வந்த பிங்க் ரோந்து வாகனங்களை, மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா் சிவராமன், கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையா் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

