அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இதுவரை 188 டிஎம்சி தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நிகழாண்டில் இதுவரை 188 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:55 pm

Syndication

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நிகழாண்டில் இதுவரை 188 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை தண்ணீா் திறந்துவிடப்படும். டெல்டா பாசனத்துக்கு 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீா் தேவையுள்ளது. அதேசமயம் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தால் தண்ணீா் தேவையின் அளவு குறையும்.

நிகழாண்டில் மேட்டூா் அணையில் இருந்து இதுவரை டெல்டா பாசனத்துக்கு 188 டிஎம்சி தண்ணீா், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 7 டிஎம்சி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தொடா் மழை, கா்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் மூலம் நிகழாண்டு மேட்டூா் அணைக்கு 309 டிஎம்சி தண்ணீா் வந்துள்ளது.

இதனால் மேட்டூா் அணை நீா்மட்டம் சனிக்கிழமையுடன் சோ்த்து தொடா்ந்து 404 ஆவது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் வரும் ஜூன் 12 ஆம் தேதி குறித்த நாளில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளது.

அணை நிலவரம் (சனிக்கிழமை): மேட்டூா் அணை நீா்மட்டம் 114.81 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5268 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 85.43 டிஎம்சியாக உள்ளது.