ஏற்காட்டை அடுத்த நீா்முள்ளிகுட்டையில் வாழப்பாடி விவசாயிகளுக்கான மிளகு, பட்டை சாகுபடி குறித்த தோட்டக்கலை தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கேரள மாநிலம், கோழிக்கோடு இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டத்தில் இப்பயிற்சிகள் நடைபெற்றன.
ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் மாலதி, சமவெளியில் மிளகு, இலவங்கப்பட்டை உற்பத்தி, அதன் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி குறித்து விளக்கினாா்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கும் முறைகள், உழவா்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மிளகு, பட்டை, காபி உற்பத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகளும் விளக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இடுபொருள், கருவிகள் வழங்கப்பட்டன. 180 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் பேராசிரியா் செந்தில்குமாா், சுந்தரவதனம், வேளாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை அலுவா்கள் கலந்துகொண்டனா்.
படவிளக்கம் 25 ஒய்ஆா் 1
விவசாயிகளுக்கு நாற்றுகள் வழங்கும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் மாலதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










