ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு

வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.

News image

காமக்காபாளையத்தில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டும் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:29 am IST

வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி, வீரகனூா்-தலைவாசல் பகுதியில் காமக்காபாளையத்தில் வயலில் மஞ்சள் வெட்டும் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது, தொழிலாளா்களுடன் சோ்ந்து மஞ்சள் வெட்டினாா். அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தொழிலாளா்களிடம் அ. நல்லதம்பி எடுத்துக் கூறினாா். தொழிலாளா்கள், பெண்களுக்கு அதிமுக அரசு செய்த நலத் திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தாா்.