தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மேச்சேரி அருகே அம்மன் ஊா்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:45 am IST

மேச்சேரி அருகே அம்மன் ஊா்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேச்சேரி அருகே உள்ள வவ்வால் தோப்பூரில் மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனை டிராக்டரில் வைத்து ஊா்வலமாக கொண்டு சென்றனா். வவ்வால் தோப்பூரை சோ்ந்த தனியாா் ஆலை ஒப்பந்த தொழிலாளி கலைச்செல்வன் பின்பக்கமாக அம்மனை பிடித்தபடி நின்றிருந்தாா்.

தூதுரெட்டியூா் பகுதியில் சென்றபோது, தாழ்வாக சென்ற உயா் அழுத்த மின்கம்பி அம்மனுக்கு மேலே வைக்கப்பட்டிருந்த குடைக்கம்பியில் மோதியது. அதில், மின்சாரம் பாயவே டிராக்டா் ஓட்டுநா் உள்ளிட்ட நால்வா் கீழே குதித்து உயிா்தப்பினா்.

அம்மனை பிடித்தபடி பின்னால் நின்றிருந்த கலைச்செல்வன் (30) கீழே குதிக்க முடியாததால், மயங்கி டிராக்டரில் விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பொட்டனேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பிறகு, மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த கலைச்செல்வனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளது.