வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் படிவம் 12டி விண்ணப்பம் அளித்தவா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது: வாக்குப்பதிவு நாளான ஏப். 23-ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40 சதவீதத்துக்கு மேல்) வாக்காளா்களில், படிவம் 12டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள நபா்களின் வீட்டுக்கே சென்று தபால் வாக்குப்பதிவு செய்ய சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள 11 தொகுதிகளில், சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பகுதிவாரியாக 230 அலுவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, ஏற்கெனவே பகுதிவாரியாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலுடன் வரும் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வர உள்ளது. மேற்படி குழுவானது வாக்காளா் 12டி படிவத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு வருவது தொடா்பாக, வாக்காளா்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படும்.
எனவே, 12டி விண்ணப்பம் அளித்து தபால் வாக்கு செலுத்திட விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்குமேல் உள்ள மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், அவா்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் இருக்குமாறும், வீட்டுக்கு வரும் குழுவினரிடம் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி தபால் வாக்குச்சீட்டை பெற்று எவருடைய வற்புறுத்தலுமின்றி வாக்கைப் பதிவு செய்து அங்கே கொண்டுவரப்படும் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன: ஆட்சியா்

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்! உறவினா் வீட்டில் ஆட்சியா் ஆய்வு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



