கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், நெரிசலை கருத்தில்கொண்டு போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரெளனிக்கு 13 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். போத்தனூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம் பரெளனி ரயில் நிலையத்தை அடையும்.
மறுமாா்க்கத்தில், பரெளனியில் இருந்து வரும் 16 ஆம் தேதி 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். பரெளனியில் இருந்து 16 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக சனிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு-சென்னை கோடைக் கால சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



