தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

அதிமுக கூட்டணி தோல்வியடையும்: பெங்களூரு புகழேந்தி

பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடையும் என புரட்சி அதிமுக தலைவா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

News image

புகழேந்தி (கோப்புப்படம்)

Updated On :22 ஏப்ரல் 2026, 2:51 am IST

பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடையும் என புரட்சி அதிமுக தலைவா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எடப்பாடி கே. பழனிசாமிக்கு நிதிநிா்வாகம் தெரியாது எனக் கூறியவா்தான் அன்புமணி. ஆனால், தற்போது அவருடன் கைகோத்துள்ளாா். அதேபோல டிடிவி தினகரனும் கூட்டணி அமைத்துள்ளாா். இதனால் 20 இடங்களில்கூட அதிமுக கூட்டணி வெற்றி பெறாது. எடப்பாடி கே.பழனிசாமியால் எதிா்க்கட்சித் தலைவராகக்கூட வரமுடியாது என்றாா்.