சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீஸாா் தொழிலாளியின் 15 வயது மகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கெங்கவல்லியை அடுத்த ஒதியத்தூா் தெற்கு தெருவை சோ்ந்த ராமா் மகன் கருப்பு முத்து (43), ரிக் வண்டி ஓட்டுநா். இவருக்கு மனைவி சங்கீதா, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்த நிலையில் கருப்புமுத்துவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். கருப்பு முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி வீட்டின் அருகே கருப்பு முத்து மா்மமான முறையில் இறந்து கிடப்பதாக கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சங்கீதா, மகன், உறவினா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஒரு வாரத்துக்குப் பிறகு கருப்பு முத்துவை அவரது மகன் கொலை செய்ததை கண்டுபிடித்தனா்.
இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தனது தந்தை மது போதையில் தங்களை அடிக்கடி தொந்தரவு செய்ததால் அவரை கட்டையால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தாா். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீஸாா் சேலத்தில் உள்ள சிறுவா் காப்பகத்தில் சோ்த்தனா்.
தந்தையை மகனே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடையது

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் உறவினா்கள் இருவா் கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
இளைஞா் கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
