டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பேருந்து வழித்தட நீட்டிப்பு, கூடுதல் நடை சேவை! போக்குவரத்து அமைச்சா் தொடங்கிவைத்தாா்!

News image

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

சேலம் மாவட்டத்தில் 4 நகரப் பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு, 2 நகரப் பேருந்துகளின் கூடுதல் நடை சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கொழிஞ்சிப்பட்டி, தாரமங்கலம், ஓமலூா், வாழப்பாடி பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சா் பங்கேற்று சேவைகளை தொடங்கிவைத்தாா். அதன்படி, ஓமலூரிலிருந்து வடகம்பட்டி செல்லும் நகரப் பேருந்தின் வழித்தடம் பெருமாள் கோயில் மேட்டிலிருந்து வெளவால் தோப்பு வரை நீட்டிக்கப்பட்டது.

ஓமலூா் - தாரமங்கலம் நகரப் பேருந்து ரெட்டிப்பட்டி பிரிவில் இருந்து ரெட்டிப்பட்டி பொடாரியம்மன் கோயில் வரை நீட்டிக்கப்பட்டது. வாழப்பாடி - தாண்டானூா் நகரப் பேருந்து இடையப்பட்டி வரை நீட்டிக்கப்பட்டது. சேலம் - பேளூா் நகரப் பேருந்து சேவை பெருமாபாளையம் வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும், சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கொழிஞ்சிப்பட்டி செல்லும் பேருந்துக்கு கூடுதலாக 2 நடைகளும், மேட்டூரிலிருந்து தாரமங்கலம் செல்லும் பேருந்துக்கு கூடுதலாக ஒரு நடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் க. இளம்பகவத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் மே.ச. பழனிவேல் (வீரபாண்டி), கா. சிவகுமாா் (சேலம் வடக்கு), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் அ. கிருஷ்ணமூா்த்தி, பொது மேலாளா் (சேலம்) வ. சிவக்குமாா், பொது மேலாளா் (தொழில்நுட்பம்) ந. கலைவாணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.