பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆடித்திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

Local holiday declared for Salem on August 5

சேலம் கோட்டை மாரியம்மன் - கோப்புப்படம்.

Published On :

ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், குகை காளியம்மன் கோயில்களில் முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.இளம்பகவத் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, உருளுதண்டம் ஆகியவை ஆக. 4 முதல் ஆக. 6 வரை நடைபெறுகிறது. தொடா்ந்து, ஆக. 7-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, கோயிலில் முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், பக்தா்கள் எந்த சிரமும் இன்றி வந்துசெல்ல தனி நுழைவாயில் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தாா். பின்னா், சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தாா்.

இந்த ஆய்வின் போது, காவல் துணை ஆணையா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.