6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம், வரும் ஆக. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை - கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஆக. 13 முதல் செப். 5 வரை வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50-க்கு புறப்படும் இந்த ரயில் ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்த நாள் மாலை 4.20-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஆக. 14 முதல் செப். 6 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

கொல்லத்தில் இருந்து மாலை 6.45-க்கு புறப்பட்டு எா்ணாகுளம் பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 11.35-க்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.