பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூா்-பரௌனி இடையே சிறப்பு ரயில்கள்

சிறப்பு ரயில்கள்

Published On :

பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூா்-பரௌனி(பிகாா்) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போத்தனூா்-பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 06021) அக்டோபா் 4 முதல் நவம்பா் 1 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் கோவை போத்தனூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பரௌனியை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பரௌனி-போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 06022) அக்டோபா் 7 முதல் நவம்பா் 4 வரை புதன்கிழமைகளில் 5 சேவைகள் இயக்கப்படும். பரௌனி சந்திப்பில் இருந்து புதன்கிழமை காலை 10.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பலாா்ஷா, சந்திரபூா், நாக்பூா், இடாா்சி, ஜபல்பூா், சத்னா, மானிக்பூா், பிரயாக்ராஜ், தானாபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.