தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சேலம் வழியாக போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சிறப்பு ரயில்கள்

Published On :

பண்டிகை காலங்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சேலம் வழியாக போத்தனூா் - பரௌனி (பிகாா்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வரும் பண்டிகை காலங்களில் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போத்தனூா் - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் அக். 4-ஆம் தேதிமுதல் நவ. 1-ஆம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூா் சந்திப்பில் இருந்து காலை 6.15-க்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1.30-க்கு பரௌனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், பரௌனி - போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் அக். 7-ஆம் தேதிமுதல் நவ. 4-ஆம் தேதிவரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் பரௌனியில் இருந்து காலை 10.30-க்கு புறப்பட்டு பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக வெள்ளிக்கிழமை மாலை 6.30-க்கு போத்தனூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.