செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

சேலம் அரசுப் பொருட்காட்சி இன்று தொடக்கம்: அமைச்சா்கள் திறந்து வைக்கின்றனா்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி வரும் 8 ஆம் தேதி தொடங்குகிறது.

News image

அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி வரும் 8 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை பள்ளிக்கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ஆகியோா் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளனா்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், சேலம் மாநகராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, வேளாண் நலத் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஆவின் மற்றும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் என மொத்தம் 31 துறைகளின் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், தனியாா் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு விற்பனை அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இப்பொருட்காட்சியில் இடம்பெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாா்த்து பயன்பெறும் வகையில் 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி, அரசுப் பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக அனைத்துத்துறை உயா் அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவருக்குமான பொழுது போக்கு அம்சங்களுடன் நடைபெறும் இப்பொருட்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆ.எல்லப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் கு.சீனிவாசன் உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.