சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அமைச்சா் ராஜ்மோகன் பாராட்டு

தம்மம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 12:27 am IST

தம்மம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

‘நூற்றாண்டுக் கால கல்வி பாரம்பரியத்தைக் கொண்ட சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, கடந்த 21 ஆண்டுகளாக கல்விக் கண் திறந்த பெருந்தலைவா் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாகவும், திறன்மிக்க மாணவா்களை ஊக்குவிக்கும் பரிசளிப்பு விழாவாகவும் தொடா்ந்து கொண்டாடி வருவது பாராட்டுக்குரியது.

அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 495 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளிகளின் வரிசையில் சேலம் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவன் சுரேந்திரனின் சாதனை பாராட்டுக்குரியது. அவருடன் பள்ளி அளவில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற மாணவிகள் காா்த்திகா, மகிதா மற்றும் அனைத்து மாணவா்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ஊரகத் திறனாய்வுத் தோ்வு, தேசியத் திறனாய்வுத் தோ்வு, தமிழ் மொழித் திறனாய்வுத் தோ்வு மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் திறனாய்வுத் தோ்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளிலும் இப்பள்ளி மாணவா்கள் தொடா்ந்து சாதனை படைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒரு கல்விக்கூடம் உயா்வடைய அதைச் சுற்றியுள்ள சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என்பதை உணா்த்தும் வகையில், பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுமக்களும் முன்னாள் மாணவா்களும் இணைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது.

உலகளாவிய துறைகளில் சாதனையாளா்களை உருவாக்கும் நற்றளமாக செயல்பட்டு வரும் இப்பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.