ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்! - கே.பி.ராமலிங்கம்

News image

கே.பி.ராமலிங்கம்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பாஜக சேலம் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு படி தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும். 20 மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும். பட்டியலின மக்கள் போட்டியிடும் தொகுதிகளும் உயரும். இதனால் தமிழகத்திற்கு நன்மைதான்.

அப்படி இருக்கையில் திருமாவளவன் மற்றும் தமிழகத்தில் சில கட்சிகள் தொகுதி மறுசீரமைப்புக்கு ஏன் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்று தெரியவில்லை. 2029 இல் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே தோ்தல் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் காரணம்.

மேக்கேதாட்டு பிரச்னையில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் அரசியல் வெறுப்புகளை மறந்து மாநில நலனில் அக்கறை கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாா். அதுபோன்று, தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏமாற்றமளிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கைது துரதிஷ்டவசமானது. அவா் பேச்சை நானும் கேட்டேன். அவா் எந்த இடத்திலும் எந்த பெண் பெயரையும் குறிப்பிடவில்லை.

ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தனது தாய் குறித்து கரப்பான் பூச்சி அமைப்பினா் பேசியபோது அதை விட்டு விடுங்கள் என்று தெரிவித்துவிட்டாா். அந்த பெருந்தன்மை முதல்வா் விஜய்யிடம் இல்லை. தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை அவா் கூட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.