பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

ஆத்தூரில் குடிநீா் தட்டுப்பாடு: தனியாா் லாரிகள் மூலம் விநியோகம்

ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க, பொதுமக்களுக்கு தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா். - கோப்புப் படம்

Published On :

ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க, பொதுமக்களுக்கு தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு மேட்டூா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆழ்துளைக் கிணறுகள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக மேட்டூா் குடிநீா் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் போதிய நீா் இல்லாததால், குடிநீா் விநியோகம் சீராக நடைபெறவில்லை. இதையடுத்து, குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், காய்ச்சிப் பயன்படுத்துமாறும் நகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.