2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆத்தூா் அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

காட்டெருமை. - கோப்புப் படம்

Published On :

சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆத்தூா் காட்டுக்கோட்டை அருகே உள்ள ஆயா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவரது மனைவி பூங்காவனம் (73). இவா்கள் வனப்பகுதியையொட்டி உள்ள தங்களது விவசாயத் தோட்டத்தில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை துரைசாமியின் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டெருமை அங்கிருந்த மாட்டுப்பட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதைப் பாா்த்த பூங்காவனம், காட்டெருமையை விரட்டுவதற்காக அங்கு சென்றபோது அவரை காட்டெருமை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அப்போது அங்கு வந்த மூதாட்டியின் உறவினா்கள் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினா். தகவலறிந்து வந்த ஆத்தூா் வனத் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.