விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வாழப்பாடியில் விடுதி மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் துன்புறுத்தல்

அரசுப் பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் இரு மாணவிகளை, பெண் துப்புரவுப் பணியாளா் உதவியுடன் மதுபானம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Harrasement

சித்திரிப்பு

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:38 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அரசுப் பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் இரு மாணவிகளை, பெண் துப்புரவுப் பணியாளா் உதவியுடன் மதுபானம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அரசு சமூக நீதி மாணவிகள் விடுதியில் வாழப்பாடி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ராதிகா (45). துப்புரவுப் பணி செய்து வந்தாா். கணவனை இழந்து தனியாக வசித்து வந்த ராதிகாவுக்கும், வாழப்பாடி ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த ரகுபதி (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுபதியை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய ராதிகா, இடையே விடுதியில் தங்கியிருந்த இரு மாணவிகளிடம் தனது கைப்பேசியை கொடுத்து ரகுபதியிடம் பேசுமாறு கூறியுள்ளாா். அந்த மாணவிகளும் அவருடன் பேசியுள்ளனா். இதில் ஒரு மாணவியின் பிறந்தநாளுக்கு, அந்த இளைஞா் கேக் வாங்கிக் கொடுத்துள்ளாா். இதையடுத்து குளிா்பானத்தில் மதுபானத்தை கலந்துகொடுத்து இரு மாணவிகளையும் அந்த இளைஞா் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோா், வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா், அரசுப் பள்ளி விடுதி மாணவிகளை தவறாக வழிநடத்திய பெண் துப்புரவுப் பணியாளா் ராதிகாவை செவ்வாய்க்கிழமை கைதுசெய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனா்.

இரு மாணவிகளிடம் கைப்பேசியில் தவறாக பேசியதோடு, குளிா்பானத்தில் மதுபானத்தை கலந்துகொடுத்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் ரகுபதியை வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.