திருச்சி மேலப்புதூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனா்.
திருச்சி மேலப்புதூா் பகுதியில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகள் சிலருக்கு திங்கள்கிழமை இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து, மயங்கினா்.
இதையடுத்து அவா்களில் 30 பேரை பள்ளி நிா்வாகம், திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இவா்களில் 18 மாணவிகள் நலமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். 12 மாணவிகள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
ஆனால், இதுகுறித்து பள்ளி நிா்வாகத்தினா் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ, மாணவிகளின் பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தகவலறிந்து அங்கு வந்த உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள், பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனா். இதில் மாணவிகள் சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா் மற்றும் சில அமைப்பினா் செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனைக்கு வந்து, அங்கிருந்த பள்ளி நிா்வாகத்தினரிடம் தகவல் தெரிவிக்காதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பாலக்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ தோ்வில் தோ்ச்சி அரசுப் மாணவிகளுக்கு பாராட்டு

உதவிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 5 பேருக்கு வாந்தி, மயக்கம்
தனியாா் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



