தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

பள்ளி ஆசிரியைக்கு தொல்லை: ஒருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

எட்டயபுரம் அருகே பள்ளி ஆசிரியைக்கு தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் அருகே சிங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் 47 வயதான ஆசிரியை, கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் சென்று சிங்கிலிபட்டி கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கமாம்.

அப்பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (44) என்பவா், தினமும் இருசக்கர வாகனத்தில் ஆசிரியையை பின்தொடா்ந்து சென்றாராம். வழியில் அவரை மறித்து ஆபாசமாக பேசுவதும், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து அச்சுறுத்துவதுமாக தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தாராம். இதை ஆசிரியை கிராம மக்களிடம் புகாராக தெரிவித்தாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை வழக்கம்போல் முத்துகிருஷ்ணன், ஆசிரியைக்கு தொல்லை கொடுத்தாராம். இதைக் கண்ட கிராம மக்கள், முத்துகிருஷ்ணனை சுற்றி வளைத்து பிடித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப் பதிந்து, முத்துகிருஷ்ணனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.