தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

அரசுப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண் துப்புரவுப் பணியாளா், இளைஞர் கைது

அரசுப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த பெண் துப்புரவுப் பணியாளா், இளைஞர் கைது குறித்து...

Female sanitation worker and a young man arrested for sexually harassing...

கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துப்புரவுப் பணியாளா் ராதிகா, இளைஞர் ரகுபதி. - டிஎன்எஸ்

Published On :

வாழப்பாடி: வாழப்பாடி அரசுப் பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளை, தனது நண்பருடன் கைப்பேசியில் பேசுமாறு கூறி தவறாக வழிநடத்திய பெண் துப்புரவுப் பணியாளர், தலைமறைவான அவரது நண்பரை வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு சமூக நீதி மாணவியா் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த வாழப்பாடி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராதிகா(45) என்பவா் துப்புரவு பணி செய்துவந்தாா். ராதிகாவுக்கும், வாழப்பாடி காமராஜ் நகா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த ரகுபதி(37) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ராதிகாவிடம் கைப்பேசியில் ரகுபதி தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, விடுதியில் தங்கியிருந்த இரு மாணவிகளிடம் கைப்பேசியை கொடுத்து ரகுபதியிடம் பேசுமாறு ராதிகா கூறியுள்ளாா். அந்த மாணவிகளும் அவருடன் பேசி உள்ளனா்.

இந்த நிலையில், மாணவியின் பிறந்த நாளுக்கு ரகுபதி கேக் வாங்கி கொடுத்ததாகவும், குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து இரு மாணவிகளையும் தவறான நோக்கத்தில் அவா் தொட்டதாகவும் பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவுசெய்த வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா், விடுதி மாணவிகளை தவறாக வழிநடத்திய ராதிகாவை கைது செய்து சேலம் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ரகுபதியை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்டோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Female sanitation worker and a young man arrested for sexually harassing government school hostel students by plying them with alcohol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.