சேலம் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அழைப்பு

Published on

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய நலக் குழுமத்தின் கீழ் காலியாக உள்ள சித்த மருத்துவ அலுவலா், யோகா வல்லுநா், சித்த மருந்தாளுநா் ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய நலக் குழுமத்தின் கீழ் காலியாக உள்ள சித்த மருத்துவ அலுவலா் - 1, யோகா வல்லுநா் - 1, சித்த பிரிவில் மருந்தாளுநா் - 1 ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

மேற்கண்ட பணிகளுக்கு 59 வயதுக்கு உள்பட்ட விண்ணப்பதாரா்கள் இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலா்/ நிா்வாக செயலாளா், சேலம் மாவட்ட நலச்சங்கம், பழைய நாட்டாண்மை கழக வளாகம், சேலம் - 636 001 என்ற முகவரி உள்ள சேலம் மாவட்ட நலச்சங்க அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com