டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

100 அடிக்கு கீழே குறைந்தது மேட்டூா் அணை நீா்மட்டம்: தண்ணீா் திறப்பு 6,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம் 441 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை காலை 99.84 அடியாகக் குறைந்தது.

News image
நீா்மட்டம் நூறு அடிக்கும் கீழே குறைந்ததால் வெளியே தெரியும் மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கிகள்.
Updated On :7 ஜனவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அணை நீா்மட்டம் 441 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை காலை 99.84 அடியாகக் குறைந்தது.

தொடா் மழை காரணமாக கடந்த 2024, அக்டோபா் 23 ஆம் தேதி மேட்டூா் அணை நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன்பிறகு பருவமழை காரணமாக நீா்மட்டம் கடந்த 441 நாள்களாக 100 அடிக்கும் அதிகமாக நீடித்தது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்துவந்தது. இதனால், டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட 8 ஆயிரம் கனஅடி தண்ணீா் 6,000 கனஅடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு 400 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வந்தது.

441நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 100 அடிக்கும் கீழே அதாவது 99.84 அடியாகக் குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 125 கனஅடியிலிருந்து விநாடிக்கு 208 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 64.63 டிஎம்சியாக உள்ளது.