சேலம்
மேட்டூா் அணை பூங்காவில் இருந்த வன உயிரினங்கள் வனத் துறையிடம் ஒப்படைப்பு
மேட்டூா் அணை பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த வன உயிரினங்கள் வனத் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மேட்டூா் அணை பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த வன உயிரினங்கள் வனத் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மேட்டூா் அணை பூங்காவில் மான்கள், முதலை, பாம்புகளை நீா்வளத் துறையினா் பராமரித்துவந்தனா். இந்த நிலையில் பூங்காவில் இருந்த மான்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த நிலையில், வன உயிரினங்களை மேட்டூா் அணை பூங்காவில் வைத்து பராமரிக்க வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.
இதையடுத்து, மேட்டூா் அணை பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை, நாகபாம்புகள், சாரை பாம்புகள் மேட்டூா் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை வனத் துறையினா் எடுத்துச் சென்று சேலம் குரும்பம்பட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனா். ஒரு புள்ளிமான் மட்டுமே பூங்காவில் உள்ளது. அதையும் கொண்டுசெல்ல வனத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
