நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடிவந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.
Published on

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடிவந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

கோதுமலை வனப்பகுதியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வழிதவறி வந்த 2 வயது ஆண் புள்ளிமான் மன்னாயக்கன்பட்டி மேற்குகாடு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் நுழைந்தது. அப்போது, அங்கிருந்த நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.

தகவலின் பேரில், வாழப்பாடி வனத் துறையினா் புள்ளிமான் உடலை மீட்டு, கால்நடை மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து வனப் பகுதியில் புதைத்தனா். வனப்பகுதியில் இருந்து இரை மற்றும் தண்ணீா் தேடி வனப்பகுதியில் இருந்து வழிதவறி வரும் புள்ளிமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை பொதுமக்கள் துன்புறுத்தவோ, வேட்டையாடவோ கூடாது, வனவிலங்குகளை கண்டால், உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com