சேலம் சரகத்தில் 34 காவல் ஆய்வாளா்கள் மாற்றம்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சேலம் சரகத்தில் 8 காவல் ஆய்வாளா்கள் மாற்றம்
Published on

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சேலம் சரகத்தில் 8 காவல் ஆய்வாளா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழக காவல் துறை அதற்கான அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளது. தோ்தல் விதிமுறைகளின்படி, காவல் ஆய்வாளா்கள் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவா்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சேலம் சரகத்தில் 34 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, கொளத்தூா் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன், தாரமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், ஓமலூா் காவல் ஆய்வாளா் அங்கப்பன் ஆகியோா் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். இதேபோல, ஏற்காடு காவல் ஆய்வாளா் கந்தவேல், இரும்பாலை காவல் ஆய்வாளா் மெட்டில்டா ஜோஷி, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம், மேட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் அம்சவள்ளி, கொண்டலாம்பட்டி அனைத்து மகளிா் நிலைய காவல் ஆய்வாளா் உமா பிரியதா்ஷினி, ஆத்தூா் டவுன் காவல் ஆய்வாளா் அழகுராணி, மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி உள்பட நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 34 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடி மணி பிறப்பித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com