நாமக்கல்: 5 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 5 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் 5 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த க. கபிலன், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஆய்வாளா் இளவரசன், நாமக்கல்லுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

அதேபோல புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் ஆா். புவனேஸ்வரி, சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலையத்திற்கும், பரமத்திவேலூா் ஆய்வாளா் எஸ். சிவக்குமாா், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் தவிர, நாமக்கல் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பி.வேதப்பிறவி, சேந்தமங்கலம் காவல் ஆய்வாளா் கே. கோவிந்தராஜன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் கே. சங்கரபாண்டியன் ஆகியோரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com