சேலம்
பொங்கல் பண்டிகை: சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி, போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வரும் 18-ஆம் தேதி ஒருவழி மாா்க்கமாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
போத்தனூரில் இருந்து 18-ஆம் தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அன்றைய தினம் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். இதற்கான முன்பதிவு ஜன. 14-ஆம்தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
